April 1, 2023 7:07 pm

இலங்கை தமிழர் பிரச்னையில் தீர்வு காண பிரதமர் நரேந்திர மோடி உதவ வேண்டும்இலங்கை தமிழர் பிரச்னையில் தீர்வு காண பிரதமர் நரேந்திர மோடி உதவ வேண்டும்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

“இலங்கை தமிழர் பிரச்னையில் தீர்வு காண பிரதமர் நரேந்திர மோடி உதவ வேண்டும்” என இலங்கை தமிழ் அரசியல் கட்சி தலைவர் அனந்தசங்கரி கடிதம் எழுதி உள்ளார்.

இலங்கையின் தமிழ் ஐக்கிய விடுதலை கட்சி தலைவரும், முன்னாள் எம்பியுமான அனந்தசங்கரி, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், ‘இலங்கை தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டியது அவசியம் என பிரதமர் மோடி கூறியிருக்கிறார். அதற்கு அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே முடியும்.

அதற்கு பிரதமர் மோடி உதவ வேண்டும். இலங்கையில் நடக்கும் இன மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனில் இந்தியாவை போல அதிகார பரவல் இருந்தால் மட்டுமே முடியும்‘ என கூறி உள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்