15 வயது பெண் ஒருவர் ஜிகாத்தில் இணைய முயற்சி பிரான்ஸ் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது 15 வயது பெண் ஒருவர் ஜிகாத்தில் இணைய முயற்சி பிரான்ஸ் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 15 வயது பெண் ஒருவர் சிரியாவுக்கு சென்று ஜிகாத்தில் இணைய திட்டமிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். எனினும் போலீசாரின் தீவிர முயற்சியில் அப்பெண் தடுத்து நிறுத்தப்பட்டதுடன் பெற்றோருடன் சேர்த்து வைக்கப்பட்டார்.

அஸ்சியா சைதி என்ற அப்பெண் தெற்கு பிரான்சிலுள்ள அவரது இல்லத்திலிருந்து காணாமல் போனார். உடனடியாக தங்களது மகளை காணவில்லை என அவர்களது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். பெற்றோரும், போலீசாரும் தேடி வந்த நிலையில் மார்சீலி ரெயில் நிலையம் அருகே உள்ள பார் ஒன்றில் அஸ்சியா வேலை செய்து கொண்டிருந்தார்.

ஒரு வழியாக தங்களது பெண் பாரில் வேலை செய்வதை கண்டுபிடித்து பெற்றோர் அங்கு சென்றனர். அதே சமயம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இதனிடையே அப்பெண்ணின் பேஸ்புக்கை ஆய்வு செய்த போலீசார் அவர் சிரியா சென்று ஜிகாத்தில் பங்கேற்க முடிவு செய்ததை கண்டுபிடித்தனர்.

தனது வீட்டை விட்டு வெளியேற திட்டமிட்ட அவர் பெற்றோரின் பேங்க் கார்டையும் திருடிச்சென்றுவிட்டார். இதனால் தற்போது போலீசாரின் விசாரணை வளையத்தில் அப்பெண் உள்ளார். போலீசாரின் விசாரணைக்கு செல்லும் முன் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அஸ்சியா ஜிகாத்தில் இணைவது தான் தனது இலக்கு என்று தெரிவித்தார்.

ஆனால் பெற்றோர் மற்றும் போலீசாரின் தீவிர முயற்சியால் அப்பெண் தனது மனதை மாற்றிக்கொண்டார். இது குறித்து அஸ்சியாவின் தாய் கூறுகையில்;

காணாமல் போனதிலிருந்து அவளை அனைத்து இடத்திலும் தேடிக்கொண்டிருந்தோம். ஒருவழியாக எங்கள் மகள் எங்களுக்கு கிடைத்துவிட்டாள். நாங்கள் மிகுந்த மகிழச்சியில் இருக்கிறோம் என்று கூறினார். அனைவரும் ஒருவரையொருவர் கட்டிய

ஆசிரியர்