அமெரிக்கர் மற்றும் நார்வே தம்பதிக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசுஅமெரிக்கர் மற்றும் நார்வே தம்பதிக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு

இந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசை பிரிட்டிஷ்–அமெரிக்க விஞ்ஞானி மற்றும் நார்வேயின் மருத்துவ ஆய்வுத்தம்பதி ஆகிய 3 பேர் கூட்டாக பெறுகின்றனர்.

இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. சுவீடனை சேர்ந்த ஆல்பிரட் நோபல் என்ற வல்லுனர் ஏற்படுத்திய இந்த பரிசு, அந்த நாட்டை சேர்ந்த நோபல் பரிசு அகாடமி மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்பு நேற்று தொடங்கியது. இதில் முதலாவதாக மருத்துவ துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு பரிசு அறிவிக்கப்பட்டது.

இதில் மூளை நரம்பு செல் தொடர்பான கண்டுபிடிப்புக்காக, பிரிட்டிஷ்–அமெரிக்க விஞ்ஞானியான ஜான் ஓகீப் மற்றும் நார்வேயை சேர்ந்த மருத்துவ ஆய்வுத்தம்பதியான எட்வர்ட் மோசர், மே–பிரிட் மோசர் ஆகியோருக்கு கூட்டாக நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

ஆசிரியர்