5 நாடுகளுடன் இணைந்து உருவாக்கும் மிகப்பெரிய டெலஸ்கோப்5 நாடுகளுடன் இணைந்து உருவாக்கும் மிகப்பெரிய டெலஸ்கோப்

அமெரிக்கா, சீனா, ஜப்பான், கனடா மற்றும் இந்தியா ஆகிய 5 நாடுகள் இணைந்து மிகப்பெரிய டெலஸ்கோப்பை அமைக்கின்றனர். இது ஜப்பானில் உள்ள மவுனா கீ மலையில் 4,012 மீட்டர் உயரத்தில் கட்டப்படுகிறது.

இதற்காக ரூ.8,500 கோடி செலவிடப்படுகிறது. இந்த செலவில் கால் பகுதியை ஜப்பான் ஏற்றுக் கொண்டுள்ளது.

இந்த டெலஸ்கோப் கட்டுமான பணியில் 5 நாடுகளைச் சேர்ந்த 100 விண்வெளி விஞ்ஞானிகள் பங்கேற்கின்றனர். ஜப்பானில் இதே மவுனா கீ மலைப் பகுதியில் ஏற்கனவே சுபாரு டெலஸ்கோப் உள்ளது.

கடந்த 1999–ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இது உலகிலேயே மிகப் பெரிய டெலஸ்கோப் என அழைக்கப்படுகிறது.

கட்டி முடிக்கப்பட்டவுடன் இதுவே உலகிலேயே மிகப்பெரிய டெலஸ்கோப் என்ற பெருமை பெறும். இதை 2022–ம் ஆண்டில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது ஏற்கனவே உள்ள சுபாரு டெலஸ்கோப்பை விட 13 மடங்கு பெரியது. இதன் மூலம் ஒசாகா – டோக்கியோ இடையேயான 500 கி.மீட்டர் தூரத்தில் சிறிய நாணயம் இருந்தால் கூட மிக துல்லியமாக பார்க்க முடியும்.

பூமியில் இருந்து மிக தொலைவில் உள்ள நட்சத்திரங்களையும் இதன் மூலம் தெளிவாக காண முடியும்.

ஆசிரியர்