அமெரிக்காவில் எபோலா வைரசை அழிக்கும் ரோபோஅமெரிக்காவில் எபோலா வைரசை அழிக்கும் ரோபோ

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பரவும் ‘எபோலா’ என்ற நோய் சர்வதேச நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் ‘எபோலா’ என்ற கொடிய வைரஸ்களால் பரவுகிறது. எனவே, அந்த வைரஸ் கிருமிகளை அழிக்க புதிதாக ஒரு ‘ரோபோ’வை அமெரிக்காவின் டெக்சாசில் உள்ள ஒரு நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த ரோபோ ஆஸ்பத்திரியில் உள்ள அறைகளை 5 நிமிடத்தில் துடைத்து சுத்தப்படுத்தி ‘எபோலா’ நோயை உருவாக்கும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது. இந்த ரோபோவுக்கு ‘லிட்டில் மொயே’ என பெயரிட்டுள்ளனர்.

‘ரோபோ’ மூலம் அல்ட்ரா வயலட் கதிர்களை பாய்ச்சி வைரஸ் கிருமிகள் அழிக்கப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். டெக்சாசில் உள்ள டல்லாஸ் ஆஸ்பத்திரியில் இந்த ‘ரோபோ’ பயன்படுத்தப்படுகிறது.

ஆசிரியர்