3,000 கைதிகள் மியான்மர் சிறையில் இருந்து விடுவிப்புவிடுவிப்பு

மியான்மரின் முன்னாள் ராணுவ உளவு துறையினர் உட்பட அந்நாட்டில் சிறை வைக்கப்பட்டிருந்த 3,000க்கும் மேற்பட்டோரை அந்நாட்டு அரசு மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க தொடங்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சர்வாதிகார ஆட்சி காரணமாக உலக நாடுகளின் எதிர்ப்புக்குள்ளான மியான்மரில் அண்மை காலமாக சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்ஒரு பகுதியாக அந்நாட்டு சிறையில் வாடும் 58 வெளிநாட்டினர் உள்ளிட்ட 3,073 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கி அதிபர் செய்ன் அண்மையில் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர்களை விடுவிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

 

ஆசிரியர்