குற்ற விசாரணைக்காக சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜரான முதல் அதிபர் | கென்யா நாட்டு அதிபர்குற்ற விசாரணைக்காக சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜரான முதல் அதிபர் | கென்யா நாட்டு அதிபர்

ஒரு நாட்டின் அதிபராக ஆட்சி செய்யும்போதே குற்ற விசாரணைக்காக சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜரான முதல் அதிபர் எனும் பெயரை பெற்றிருக்கிறார் கென்யாவின் உஹுரு கென்யாட்டா.

2007 மற்றும் 2008ம் ஆண்டுகளில் தேர்தலுக்குப் பிறகான வன்முறைகளைத் தூண்டிவிட்டதில் சுமார் 1,200 பேர் உயிரிழந்தனர். சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் புலம்பெயர்ந்தனர்.

இதற்கு முக்கியக் காரணம் கென்யாட்டா தான் என்று சர்வதேச நீதிமன்றம் அவரை விசாரணைக்கு அழைத்திருந்தது. இதற்கு முன்பே பலமுறை அந்த நீதிமன்றத்தில் விசாரணைக்குச் சென்றிருந்தாலும், அதிபர் ஆனதற்குப் பிறகு செல்வது இதுவே முதல்முறை.

 

ஆசிரியர்