அமெரிக்க விமான நிலையங்களில் பரிசோதனை | எபோலா வைரஸ்அமெரிக்க விமான நிலையங்களில் பரிசோதனை | எபோலா வைரஸ்

எபோலா நோய் பரவியுள்ள மற்ற நாடுகளிலிருந்து அமெரிக்கா வருவோரைப் பரிசோதிக்கும் முறை மேலும் கடுமையாக்கப்படும் என அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
அமெரிக்காவில் எபோலா பரவலைத் தடுக்கும் அரசின் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் கூறுகையில்,நியூயார்க்கிலுள்ள ஜான் எப். கென்னடி விமான நிலையம், வாஷிங்டனுக்கு வெளியில் அமைந்துள்ள டலஸ் விமான நிலையம், சிகாகோவிலுள்ள ஓஹேர் விமான நிலையம், அட்லாண்டாவிலுள்ள ஹார்ட்ஸ்பீல்டு-ஜாக்ஸன் விமான நிலையம், நியூஜெர்ஸி மாகாணத்திலுள்ள நூயர்க் நகர விமான நிலையம் ஆகிய 5 விமான நிலையங்களில் பரிசோதனை முறைகள் தீவிரப்படுத்தப்பட உள்ளது என்றார்.

ஆசிரியர்