தமிழரைத் துணை அமைச்சராக அதிபர் ராஜபட்ச நியமித்துள்ளார்தமிழரைத் துணை அமைச்சராக அதிபர் ராஜபட்ச நியமித்துள்ளார்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தமிழரைத் துணை அமைச்சராக அதிபர் ராஜபட்ச நியமித்துள்ளார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான வி.எஸ். ராதாகிருஷ்ணன்,

தாவரப் பூங்காக்கள், பொதுக் கேளிக்கைத் துறையின் துணை அமைச்சராக வியாழக்கிழமை பதவியேற்றார் என அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதியான ராதாகிருஷ்ணன், கடந்த 2010-ஆம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நுவரேலியா தொகுதியில் போட்டியிட்டார்.

இலங்கையின் மத்திய பகுதியில், தொழிற்சங்கம் மற்றும் அரசியல் கட்சியாகச் செயல்பட்டு வரும் அமைப்புகளில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரúஸ மிகப் பெரியதாகும்.

முன்னதாக, கடந்த மாதம் ஊவா மாகாணத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர், இரு தமிழர்களை துணை அமைச்சராக அதிபர் மகிந்த ராஜபட்ச நியமித்தார். அதைத் தொடர்ந்து, மேலும் ஒரு தமிழர் இப்போது அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ராஜபட்ச அதிபராகப் பதவியேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இடைத் தேர்தலுக்கு அவர் தயாராகி வருகிறார் என்று கூறப்படுகிறது. இலங்கை அதிபரின் பதவிக் காலம் ஆறு ஆண்டுகளாகும். ஆயினும், நான்கு ஆண்டுகள் முடிவுற்றதும் அதிபர் பதவிக்கு இடைத் தேர்தல் நடத்தலாம் என்பது குறிப்பிடத் தகுந்தது.

ஆசிரியர்