April 1, 2023 5:40 pm

நோபல் பரிசு | கைலாஷ் மற்றும் சிறுமி மலாலாநோபல் பரிசு | கைலாஷ் மற்றும் சிறுமி மலாலா

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இந்திய சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி, பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப்சாய் இருவரும் 2014-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை பகிர்கின்றனர்.

குழந்தைகள் நல உரிமைகளுக்காக பல்வேறு அமைதிவழிப் போராட்டங்களை நடத்தியது, குழந்தைகளின் கல்விக்கான உரிமைகளுக்காக போராடியது உள்ளிட்ட இவர்களது தன்னலமற்ற பங்களிப்புக்காக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக நார்வே நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.

டெல்லியில் வசித்து வரும் 60 வயதாகும் கைலாஷ் சத்யார்த்தி, 1990ஆம் ஆண்டு முதல் குழந்தைத் தொழிலாளர்கள் என்ற சுரண்டலை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தி வருகிறார். இவரது குழந்தைகள் மீட்பு அமைப்பு இதுவரை 80,000 குழந்தைகளை பல்வேறு விதமான சுரண்டல்களிலிருந்து மீட்டு மறுவாழ்வு அளித்துள்ளது.

இந்திய சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தியுடன் அமைதி நோபல் பரிசைப் பெறுகிறார் சிறுமி மலாலா யூசுப்சாய்.

பாகிஸ்தானில் மகளிர் கல்விக்காக போராடி, அதனால் பல இன்னல்களையும், தாலிபான்களின் கோபத்திற்கும் ஆளாகியுள்ல மலாலாவுக்கும் நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது நோபல் கமிட்டியின் ஒரு திட்டமிட்ட பார்வையின் விளைவினால் என்று கூறப்படுகிறது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்