உலக சுகாதார நிறுவனம் தகவல் எபோலா நோய்க்கு பலி எண்ணிக்கை 4,033உலக சுகாதார நிறுவனம் தகவல் எபோலா நோய்க்கு பலி எண்ணிக்கை 4,033

மேற்கு ஐரோப்பிய நாடுகளான லைபீரியா, நைஜீரியா, கினியா, சியாரா லோன் ஆகிய 4 நாடுகளில் எபோலா என்ற கொடிய வைரஸ் நோய் பரவியுள்ளது. உயிர்க்கொல்லி நோயான இதை குணப்படுத்த மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 4,033 ஆக உயர்ந்துள்ளது. மேற்கு ஐரோப்பிய நாடுகளை தவிர செனேகல், ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் எபோலா நோய் தாக்கி உள்ளது.

லைபீரியாவில் தான் எபோலா நோய் தாக்கம் அதிகம் உள்ளது. அங்கு பாதிக்கப்பட்டிருந்த 4076 பேரில் 2,316 பேர் பலியாகி உள்ளனர். சியாரா லோனில் பாதிக்கப்பட்ட 2,950 பேரில் 930 பேர் இறந்துள்ளனர்.

கினியாவில் பாதிக்கப்பட்ட 1350 பேரில் 416 பேர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களில் 233 சுகாதார பணியாளர்களும் அடங்குவர்.

நைஜீரியாவில் 20 பேர் எபோலா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 8 பேரும், அமெரிக்கா மற்றும் ஸ்பெயினிலும் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

காங்கோ நாட்டில் எபோலா பாதிக்கப்பட்டுள்ள 71 பேரில் 43 பேர் பலியாகி உள்ளனர். செனேகலில் ஒருவர் இறந்துள்ளார்.

இந்த தகவலை உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆசிரியர்