பாதங்கள் பின்னோக்கி அமைந்துள்ள பெண் , சீனாவில்பாதங்கள் பின்னோக்கி அமைந்துள்ள பெண் , சீனாவில்

உலகம் முழுவதும், விசித்திரமான உருவ அமைப்புகளுடன் குழந்தைகள் பிறப்பது வழக்கம். அவ்வாறு பிறக்கும் பல குழந்தைகள், பிறந்த சில நாட்களிலேயே இறந்து விடும். ஒரு சில குழந்தைகள் மட்டும் தான், வளர்ந்து பெரியவர்களாகி, மற்றவர்களை அதிசயப்படுத்துகின்றனர்.

அந்த வகையில், சீனாவின் சோங்கிங் பகுதியை சேர்ந்த, வாங் பாங் என்ற பெண், பார்ப்பதற்கு சாதாரண பெண்ணாக காட்சியளித்தாலும், வித்தியாசமான கால்களைக் கொண்டுள்ளார். அனைவருக்கும் உள்ளது போல இல்லாமல், இவரின் பாதங்கள் பின்னோக்கி அமைந்துள்ளன. இத்தகைய பாதங்களால் சரிவர நடக்க முடியாது என்று டாக்டர்கள் கூறினாலும், தன்னால் நன்றாக நடக்க முடிவதாகவும், ஓட்டப் பந்தயத்தில், தன் தோழிகளை பின்னுக்கு தள்ளியுள்ளதாகவும் வாங் பாங் கூறியுள்ளார். இவர் அணியும் செருப்புகள், முன்னோக்கி இல்லாமல், உடலுக்கு பின்புறம் நீட்டிக் கொண்டுஇருக்கும்.

பிறவிக் குறைபாடு உள்ளவர்களுக்கு, அந்நாட்டு அரசு வழங்கும் பென்ஷன் தொகையை வாங்க மறுத்த இந்தப் பெண், சோங்கிங் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் பணிபுரிந்து வருகிறார். பின்னோக்கிய பாதங்கள் உள்ள வாங் பாங்கின் மகன், மற்றவர்களைப் போன்ற சாதாரண பாதங்களைப் பெற்றுள்ளான்.

ஆசிரியர்