பஹ்ரைன் தேர்தல்: எதிர்க்கட்சிகள் புறக்கணிப்புபஹ்ரைன் தேர்தல்: எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

பஹ்ரைனில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் சனிக்கிழமை அறிவித்தன.

சன்னி பிரிவைச் சேர்ந்த மன்னரின் ஆட்சி நடைபெறும் பஹ்ரைனில், அதிக உரிமை கோரி ஷியா பிரிவினர் 2011-ஆம் ஆண்டு முதல் போராடி வருகின்றனர்.

அதற்குப் பிறகு அந்நாட்டில் நடைபெறும் முதல் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், ஷியா இயக்கமான அஸ்-வெஃபாக் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி, இந்தத் தேர்தலைப் புறக்கணிப்பதாக சனிக்கிழமை அறிவித்தது.

பஹ்ரைனில் ஏகபோக ஆட்சியை உறுதிப்படுத்தும் வகையில் அந்தத் தேர்தல் நடத்தப்படுவதால், அதனைப் புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.

ஆசிரியர்