ஐ.எஸ்.ஐ.எஸ். சந்தேகத்துக்குரியவர்கள் கண்காணிப்பு வளையத்துக்குள்- லண்டனில் ஐ.எஸ்.ஐ.எஸ். சந்தேகத்துக்குரியவர்கள் கண்காணிப்பு வளையத்துக்குள்- லண்டனில்

ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அங்கு தனிநாடு உருவாக்கியுள்ளனர். தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து ஜெர்மன், பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து அங்கு செல்லும் இளைஞர்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்து சண்டையில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எனவே, இங்கிலாந்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் உள்ளனரா? என தீவிர கண்காணிப்பு பணி நடைபெறுகிறது. குறிப்பாக லண்டனில் இப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இங்கு ஆயிரக்கணக்கானவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் 5 பேரை ஸ்காட்லாந்து போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடைபெறுகிறது.

அவர்களுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உண்டா? அல்லது லண்டனில் தாக்குதல் நடத்த திட்டம் உண்டா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த தகவலை லண்டன் மாநகர மேயர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

மேலும், லண்டன் மாநகரில் கண்காணிப்பு பணி தீவிரமாக உள்ளது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சந்தேகத்துக்குரியவர்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

ஆசிரியர்