அமெரிக்காவில் தூதரக அதிகாரியாக பணியாற்றியபோது தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து சமீபத்தில் தேவயானி கோப்கடே டிவியில் பேட்டி அளித்தார். இந்திய வெளியுறவு துறையின் அனுமதி இல்லாமல் பேட்டி அளித்தது குறித்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் தேவயானி கோப்ரகடே மூத்த அதிகாரியாக பணியாற்றினார். தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி போலி விசா மூலம் இந்தியாவில் இருந்து பெண் பணியாளரை வரவழைத்தார் என்றும், அவருக்கு உரிய சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக இந்திய தூதரக அதிகாரி தேவயானி கோப்ரகடேவை அமெரிக்க அரசு கைது செய்தது. எனினும். இரு நாடுகளின் நட்புறவை பயன்படுத்தி மன்மோகன் சிங் அரசு தேவயானியை இந்தியாவுக்கு திரும்ப அழைத்து கொண்டது. இந்நிலையில், அமெரிக்காவில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து சமீபத்தில் மும்பையில் டிவி ஒன்றுக்கு தேவயானி கோப்ரகடே பேட்டி அளித்தார் அப்போது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நட்புறவை சீர்குலைக்கும் வகையில் கருத்து சொல்லியதாக கூறப்படுகிறது. மேலும், இந்த டிவி பேட்டிக்கு வெளியுறவு துறை அமைச்சகத்தின் அனுமதியைப் பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.