March 24, 2023 3:20 pm

செவ்வாய் கிரகத்தில் தங்க பயிற்சி தனிக்கூண்டில் 8 மாதம் செவ்வாய் கிரகத்தில் தங்க பயிற்சி தனிக்கூண்டில் 8 மாதம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

செவ்வாய் கிரகத்தில் தங்க 6 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்கள் தனிக்கூண்டில் 8 மாதம் தங்குகின்றனர்.

அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற் கொண்டுள்ளது. எண்டீவர் உள்பட ஆளில்லா விண்கலன்களை அனுப்பியுள்ளது. செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பு, தட்ப வெப்ப நிலை போன்றவை குறித்து ஆராய்ச்சி நடத்தி வருகிறது.

இந்த நிலையில், வருகிற 2030–ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு ஆட்களை அனுப்பி அங்கு தங்க வைக்க ‘நாசா’ மையம் திட்டமிட்டுள்ளது.

அதற்கான பயிற்சியை தற்போது மேற்கொண்டுள்ளது. இப்பயிற்சி 3 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்காக ஹவாய்தீவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் விசேஷ கூண்டு ‘டூம்’ உருவாக்கப்பட்டுள்ளது.

அது 36 அடி அகலமும் 2 அடுக்கு மாடிகளையும் கொண்டது. அதில் 3 ஆண்கள், 3 பெண்கள் என 6 பேர் பயிற்சி பெறுகின்றனர்.

அவர்களின் பயிற்சி நேற்று தொடங்கியது. அங்கு அவர்களுக்கு தனித்தனி 6 சிறிய படுக்கை அறைகள் உள்ளன. மேலும் அவர்கள் அங்கு தங்க அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

அவர்கள் உடற்பயிற்சி மேற்கொள்ள சைக்கிள், டிரட்மில் எந்திரம் உள்ளன. தங்கியிருக்கும் 6 பேருக்கும் நாள் ஒன்றுக்கு 8 லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

அதை வைத்து தான் அவர்கள் குடிக்க, குளிக்க, சமைக்க, மற்றும் உடைகளை சுத்தம் செய்ய போன்ற அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்த வேண்டும்.

மேலும் அவர்கள் அங்கிருந்து தங்களது குடும்பத் தினருக்கும், நண்பர்களுக்கும் இ–மெயில் அனுப்பும் வசதியும் உள்ளது. ஆனால் அந்த செய்தி 20 நிமிடங்களுக்கு பிறகு தான் கிடைக்கும்.

அதே நேரத்தில் வெளியில் இருந்து அனுப்பும் இ–மெயில் சென்றடைய 40 நிமிட நேரமாகும். செவ்வாய் கிரகத்தில் இருந்து பூமிக்கு அனுப்பும் தகவல்கள் கிடைக்க மேற்கண்ட நேரமாகும் என்பதால் அதே போன்று இங்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பயிற்சியின் மூலம் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா என்று அறிய முடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்