பாப் இசை நிகழ்ச்சியில் கட்டிடம் இடிந்து 16 பேர் பலி- தென்கொரியாவில்பாப் இசை நிகழ்ச்சியில் கட்டிடம் இடிந்து 16 பேர் பலி- தென்கொரியாவில்

தென்கொரியா தலைநகர் சியோல் அருகே சியோங்னம் நகரம் உள்ளது. அங்குள்ள ஒரு திறந்த வெளி அரங்கத்தில் தென் கொரியாவின் பிரபல குழுவினரின் பாப் இசை நிகழ்ச்சி நடந்தது.

அதை சுமார் 700–க்கும் மேற்பட்டோர் கூடியிருந்து ரசித்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் வாகன நிறுத்தம் கட்டிடத்தின் காற்று வெளியேறும் பகுதியின் மீது ஏறி ஏராளமானவர்கள் இசை நிகழ்ச்சியை பார்த்து ரசித்து கொண்டிருந்தனர்.

இவர்கள் சுமார் 33 அடி உயரத்தில் ஏறி நின்றனர். அப்போது கட்டிடத்தின் கூரை திடீரென இடிந்து விழுந்தது. அதில் சிக்கி 12 பேர் சம்பவ இடத்தில் பலியாகினர்.

15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி 16 ஆக உயர்ந்தது.

இதற்கிடையே, காயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அதனால் சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

ஆசிரியர்