April 1, 2023 7:11 pm

உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல் | பிரிட்டன் துறைமுகத்திற்கு வந்ததுஉலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல் | பிரிட்டன் துறைமுகத்திற்கு வந்தது

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

பிரிட்டனின் லண்டன் துறைமுகத்திற்கு, முதல் முறையாக வந்த, உலகின் மிகப்பெரிய, ‘ஒயசிஸ் ஆப் த சீஸ்’ என்னும் பயணிகள் கப்பலை, நூற்றுக்

கணக்கானோர் வரவேற்றனர். சுமார், 2,25,282 டன் எடையில், 1,187 அடி நீளமும், 208 அடி அகலமும் கொண்ட, ராயல் கரீபியன் நிறுவனத்திற்கு சொந்தமான இக்கப்பலில், பயணிகள் தங்குவதற்காக, 16 தளங்களில் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆறாயிரத்து 296 பயணிகள் மற்றும் 2,000 ஊழியர்கள் தங்கும் வசதி உள்ளது. பின்லாந்தின், துர்க்கூவில் இக்கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகள் நடந்த கப்பல் கட்டுமானப் பணிக்கு, சுமார் 7,889 கோடி ரூபாய்செலவிடப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில், நீச்சல் குளம், பூங்கா, திறந்தவெளி தோட்டம் உள்ளிட்ட அனைத்து நவீன வசதிகளும் உள்ளன; 24 மணி நேர உணவு

வசதியுடன், தினமும், 2.35 கோடி லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.

பத்தாயிரம் சதுர மீட்டரில் வணிக வளாகம், 37 பார்கள், 20 உணவகங்கள், அலங்காரத்திற்காக, 12 ஆயிரம் பனை மரங்கள் உள்ளன. கப்பல் முழுவதற்குமான மின் இணைப்புக்கு, 3,300 மைல் நீளம் உள்ள மின் கேபிள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 2009ம் ஆண்டு, தனது போக்குவரத்தைத் துவங்கிய இந்தக் கப்பல், கடந்த புதன்கிழமை லண்டன் துறைமுகத்தை வந்தடைந்தது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்