‘கடாலான் ’மக்கள் ஸ்பெயினில் தனிநாடு கேட்டு பேரணி‘கடாலான் ’மக்கள் ஸ்பெயினில் தனிநாடு கேட்டு பேரணி

ஸ்பெயின் நாட்டில் ‘கடாலான்’ பகுதியை ஒருங்கிணைந்து தனிநாடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 9–ந்தேதி அப்பகுதி சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தப்படும் என போராட்டக்காரர்கள் அறிவித்து இருந்தனர்.

அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்றன. அதனால் ‘கடாலான்’ என்ற புதியநாடு உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது சட்டவிரோதம் என ஸ்பெயின் அரசு அறிவித்து தடை செய்தது.

அதனால் அப்பகுதி மக்கள் ஆத்திரம் அடைந்தனர். தங்களுக்கு தனிநாடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பார்சிலோனா நகரில் மாபெரும் பேரணியை நடத்தினார்கள்.

அதில் சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொண்டனர். பேரணியில் பங்கேற்றவர்கள் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தினால் ஆன கடாலான் சுதந்திர கொடியை ஏந்தி வந்தனர்.

‘‘இதுதான் எங்களுக்கு உகந்த நேரம்’’ என்பன போன்ற பேனர்களை ஏந்தி வந்தனர். முன்னதாக 3 மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும். வர இருக்கும் புதிய அரசு கடாலான் பிரச்சினையை கையாளும் என அரசு அறிவித்து உள்ளது.

அதற்கு பிரிவினைவாத இயக்க தலைவர் ஆர்தர் மாஸ் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளார். சுதந்திரம் வழங்குவது குறித்து பொதுமக்களிடம் ஓட்டுப் பதிவு மூலம் கருத்து கேட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்

ஆசிரியர்