உலகின் 5வது பெரிய நாடாக விளங்கும் பிரேசில் நாட்டின் அதிபராக டில்மா ரூசெப் இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மொத்தம் பதிவான 98 சதவீத வாக்குகளில் அவர் 51.5 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளதாக பிரேசில் நாட்டு தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப் பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இந்த வெற்றி குறித்து டில்மா ரூசெப் கூறுகையில், தற்போது நான் சிறந்த அதிபராக செயல்படவேண்டியதாக உள்ளது என்றார். .