செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இந்தியாவுக்கு 142-வது இடம் | தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவும் நாடுகள்இந்தியாவுக்கு 142-வது இடம் | தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவும் நாடுகள்

இந்தியாவுக்கு 142-வது இடம் | தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவும் நாடுகள்இந்தியாவுக்கு 142-வது இடம் | தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவும் நாடுகள்

1 minutes read

தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவும் நாடுகள் பட்டியலில் இந்தியா 142-வது இடத்தில் உள்ளது. இது கடந்த ஆண்டைவிட இரண்டு இடம் குறைவு. சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது.

‘ஈஸ் ஆப் டூயிங் பிஸ்னஸ்’ என்ற தலைப்பில் இந்த ஆண்டுக் கான அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. இதில் தொழில் தொடங்க சாதகமான சூழல் நிலவும் 189 நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் 53.97 புள்ளிகளுடன் இந்தியா 142-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 52.78 புள்ளிகளுடன் 140-வது இடத்தில் இருந்தது.

இதுகுறித்து உலக வங்கி குழுமத்தின் வளர்ச்சி பொருளா தார பிரிவு இயக்குநர் அகஸ்டோ லோபஸ்-கிளாரஸ் கூறியதாவது:

கடந்த மே 31-ம் தேதி வரையிலான நிலவரத்தின் அடிப்படையில்தான் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே இந்தப் பட்டியலில் இந்தியா பின்தங்கியதற்கு மோடி தலைமையிலான அரசு காரணமல்ல. அதே நேரம் புதிய அரசு அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்கும், தொழில் தொடங்குவதற்கும் சாதகமான சூழலை உருவாக்கவும் முன்னு ரிமை கொடுத்து வருகிறது. இதன் பலன் அடுத்த ஆண்டு வெளியாகும் பட்டியலில் பிரதிபலிக்கும் என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.