இலங்கை அதிபர் தேர்தலில் மூன்றாவது முறையாக போட்டியிட அதிபர் ராஜபக்சேவுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதியளித்துள்ளது.
இலங்கை அதிபர் தேர்தல் 2015-ம் ஆண்டு நடக்கிறது.அந்நாட்டு அரசியலமைப்பு சட்டத்தின் படி ஒருவர் இரண்டு முறைக்கு மேல் போட்டியிட முடியாது என்பதால் , வரப்போகும் தேர்தலில் மீண்டும் போட்டியிட அதிபர் ராஜபக்சே சுப்ரீம் கோர்ட் கருத்தை கேட்டு மனு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் ராஜபக்சே மூன்றாவது முறையாக போட்டியிட தடையில்லை எனவும் ஒப்புதல் அளித்துள்ளதாக பார்லி.யில் நேற்று நடந்த விவாதத்தின் போது நிர்மல் ஸ்ரீபாலா டி.சில்வா கூறினார்.
