ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்போட்டின் தலைமைக்கு எதிராக ஆளும் சுதந்திரக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் திங்கள்கிழமை கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்தது.
ஆட்சியமைத்த 17 மாதங்களுக்குள் அவர் மீது கொண்டு வரப்பட்ட இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு எதிராக 61 எம்.பி.க்களும், ஆதரவாக 39 எம்.பி.க்களும் வாக்களித்தனர்.
இதுகுறித்து டோனி அப்போட் கூறுகையில், “”வாக்கெடுப்பின்போது “மரணத்தின் விளிம்பில்’ இருப்பதைப் போல் உணர்ந்தேன். முன்பைவிடச் சிறந்த முறையில் பணியாற்ற முடிவு செய்துள்ளேன். இன்னும் ஆறு மாதங்களுக்குள் நிர்வாகத்துக்குப் புத்துயிர் அளிப்பேன் என்றார்.