June 8, 2023 6:35 am

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக சீனா ஆதரவுஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக சீனா ஆதரவு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

பிரதமர் நரேந்திரமோடி விரைவில் சீனா செல்ல இருக்கிறார். இந்த நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக சீனா ஆதரவு அளித்துள்ளது. இந்த தகவலை சீன வெளியுறவு மந்திரியின் செய்தி தொடர்பாளர் ஹுயா சங்யிங் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறும் போது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினராவதில் சீனாவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆதரவு அளிக்கிறோம். அதே நேரத்தில் ஜப்பானுக்கு ஆதரவளிக்க முடியாது என்றார்.

இந்தியா, பிரேசில், ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய 4 வளரும் நாடுகள், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக போராடி வருகின்றன. இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு பல ஆண்டுகளாக சீனா எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

அருணாசல பிரதேசம் மற்றும் காஷ்மீரின் எல்லையில் பதட்டம் ஏற்படுத்தி வந்தது. கடந்த செப்டம்பர் மாதம் சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்திய வருகையை தொடர்ந்து சீனாவின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்