இந்தியா உள்ளிட்ட 4 நாடுகளுக்கு விமானங்களை விற்பனை செய்ய ஒப்பந்தங்களைப் பெற லஞ்சம் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட பிரேசிலின் எம்ப்ரேயர் நிறுவனம் 205.5 மில்லியன் டாலர்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,379 கோடியை அபராதமாக செலுத்த முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் எம்ப்ரேயர் நிறுவனத்துக்கு 205.5 மில்லியன் டாலர் அபராதத்தை எஸ்.இ.சி., விதித்தது. இந்த அபராதத் தொகையை செலுத்த எம்ப்ரேயர் நிறுவனம் ஒப்புக்கொண்டதாக எஸ்.இ.சி. தெரிவித்துள்ளது. எம்பயர் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில், இந்தியாவில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.