சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் அணு ஆயுத தயாரிப்பு அதிகரித்து வருவதை தடுக்கும் வகையில் அணு ஆயுத பரவல் தடை வரைவு தீர்மானம் ஐ.நா.வில் கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் கொண்டு வரப்பட்டது.
உலகின் அமைதி நிலவ அனைத்து நாடுகளும் இதனை ஏற்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் இந்தியா, கொரியா, இஸ்ரேல், பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் வரைவு தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன. 164 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.
இந்நிலையில் இந்த வரைவில் திருத்தம் கொண்டு வருவதற்காக அடுத்த ஆண்டு பேச்சுவார்த்தை நடத்தி புதிய வரைவை கொண்டு வர ஐ.நா. பொதுசபை தீர்மான கொண்டு வந்துள்ளது.
அணு ஆயுத தடை மற்றும் சர்வதேச பாதுகாப்பு தொடர்பான ஐ.நா. பொதுசபையின் முதல் கமிட்டி நேற்று இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது.