தென்கொரியாவில் அதிபர் பார்க் கியுன் ஹே தலைமையிலான அரசின்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பெருகிவருகிறது. அதிபரின் நெருங்கிய நண்பர் ஒருவர் அரசு விவகாரங்களில் தலையீடு செய்து ஊழலுக்கு வழிவகுத்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்தநிலையில் விரைவில் அந்நாட்டின் பாராளுமன்றத்துக்கு தேர்தல் வரவுள்ளதால் நிலைமையை சமாளிக்க புதிதாக பிரதமர், நிதி மந்திரி ஆகியோரை அதிபர் பார்க் கியுன் ஹே நியமனம் செய்துள்ளார்.
கிம் பியாங்-ஜூன் என்பவரை நாட்டின் புதிய பிரதமராகவும் தென்கொரிய அரசின் நிதித்துறை செயலாளராக பணியாற்றிவந்த ஜிம் ஜாங்-யாங் என்பவரை நிதி மந்திரியாகவும் துணை பிரதமராகவும் நியமித்து அதிபர் பார்க் கியுன் ஹே உத்தரவிட்டுள்ளதாக தென்கொரியா அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கொரிய
நாட்டின் புதிய பிரதமர் மற்றும் நிதி மந்திரியை எதிர்க்கட்சிகளின் அனுமதியின்றி நியமனம் செய்துள்ள அதிபருக்கு பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பார்க் ஜியே-வோன் கண்டனம் தெரிவித்துள்ளார்.