தென் அமெரிக்காவிலுள்ள சிலி நாட்டில், 6.4 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
தென் அமெரிக்கவிலுள்ள சிலி நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் சாண்டியகோவின் தெற்கு பகுதியிலிருந்து 192 கி.மீ., தொலைவில், 87 கி.மீ., ஆழத்தில் மையம் கொண்ட இந்நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.4-ஆக பதிவாகியுள்ளது.
இந்நிலநடுக்கத்தால் சாண்டியாகோவில் கட்டடங்களில் அதிர்வு ஏற்பட்டது. மேலும் நாட்டின் பல்வேறு பதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் அதிகார்ப்பூர்வ இன்னும் வெளியாகவில்லை