செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரீஸ் போட்டியிட்டு, முதல் பெண் ஜனாதிபதி ஆக முடியும் | பிரபல ஏடு கட்டுரைஅடுத்த ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரீஸ் போட்டியிட்டு, முதல் பெண் ஜனாதிபதி ஆக முடியும் | பிரபல ஏடு கட்டுரை

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரீஸ் போட்டியிட்டு, முதல் பெண் ஜனாதிபதி ஆக முடியும் | பிரபல ஏடு கட்டுரைஅடுத்த ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரீஸ் போட்டியிட்டு, முதல் பெண் ஜனாதிபதி ஆக முடியும் | பிரபல ஏடு கட்டுரை

1 minutes read

அமெரிக்காவில் நடந்த பாராளுமன்ற செனட் சபை தேர்தலில் கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து போட்டியிட்டு, தன்னை எதிர்த்து போட்டியிட்ட சக கட்சி வேட்பாளர் லோரட்டா சான்சேஸ்சை சுமார் 22 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வீழ்த்தி, அபார வெற்றி பெற்றிருப்பவர் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரீஸ் (வயது 52).

இவர் சென்னையை பூர்விகமாக கொண்ட தமிழ்ப்பெண். இவரது தாயார் புற்றுநோய் மருத்துவ நிபுணர் டாக்டர் சியாமளா கோபாலன், சென்னையை சேர்ந்தவர். தந்தை டொனால்டு ஹாரீஸ் ஜமைக்காவை சேர்ந்தவர்.

கமலா ஹாரீஸ், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க வக்கீல் டக்ளஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கலிபோர்னியா மாகாணத்தில் 2 முறை அட்டார்னி ஜெனரல் (அரசு தலைமை வக்கீல்) பதவி வகித்துள்ள கமலா ஹாரீஸ், ஜனாதிபதி ஒபாமாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்.

அமெரிக்காவில் 240 ஆண்டு கால சரித்திரத்தை உடைத்து, முதல் பெண் ஜனாதிபதியாக ஹிலாரி கிளிண்டன் வருவார் என்ற கனவு பொய்த்துப்போன நிலையில், இப்போது எதிர்காலத்தில், அதுவும் 4 ஆண்டுகளுக்கு பிறகு வரவுள்ள அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரீஸ் போட்டியிட்டு, முதல் பெண் ஜனாதிபதி ஆக முடியும் என அங்கிருந்து வருகிற ‘ஹபிங்டன் போஸ்ட்’ ஏடு சிறப்பு கட்டுரை எழுதி உள்ளது.

அதில்,  ‘‘கமலா ஹாரீசை சந்தியுங்கள். இவர் முதல் பெண் ஜனாதிபதி ஆக முடியும். கலிபோர்னியாவின் பிரசித்தி பெற்ற அட்டார்னி ஜெனரல், பாராளுமன்றத்துக்கு செல்கிறார். அடுத்து வெள்ளை மாளிகைக்கு செல்லலாம்’’ என கூறி, அதற்கான வாய்ப்புகள் பற்றி விளக்கி உள்ளது.

குறிப்பாக ஜனாதிபதி ஒபாமா, துணை ஜனாதிபதி ஜோ பிடென் கூட்டணியின் அபிமானத்தை பெற்றுள்ளார். இவர்களின் கூட்டணியும், அவரது பிரபலமும், 2020–ம் ஆண்டு, நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிடுவதற்கு செல்வாக்கை தேடித்தரும் என கூறி உள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை தழுவிய ஹிலாரியும், இப்போது முடியாவிட்டாலும், ஒரு காலத்தில் கண்டிப்பாக அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஒரு பெண் வருவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.