6
தென்மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள தீவு நாடான நியூசிலாந்தில், சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது; அதைத் தொடர்ந்து, அந்த நாட்டை சுனாமி தாக்கியது.
நியூசிலாந்து நாட்டின் பெரிய நகரான கிரைஸ்ட்சர்ச்சுக்கு அருகே நேற்று, சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது; இது, ரிக்டர் அளவில், ௭.4 ஆக பதிவானது.
அதன் பின், அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால், பீதியடைந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் திரண்டனர். பல இடங்களில், கட்டடங்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. பூகம்பத்தை தொடர்ந்து, நியூசிலாந்தின் தெற்கு பகுதியை, சுனாமி அலைகள் தாக்கின. நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஏற்பட்ட சேத விபரம் இன்னும் வெளியாகவில்லை.