சிரியா நாட்டில் 6–வது ஆண்டாக அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு சண்டை நீடித்து வருகிறது.
குறிப்பாக கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள அலெப்போ நகரில் கடும் சண்டை நடந்துவருகிறது. அந்த நகரின் கிழக்கு பகுதியில் அதிபர் ஆதரவு படைகள் தொடர்ந்து 2–வது நாளாக நேற்று குண்டு மழை பொழிந்தன. அத்துடன் பீரங்கி தாக்குதல்களையும் நடத்தின.
இந்த தாக்குதல்களில் 54 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.
தற்போதைய உக்கிரமான சண்டையினால், அங்கு தற்போது வசித்து வருகிற 2¾ லட்சம் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்கின்றனர்.
அதே நேரத்தில் இந்த சண்டையில் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ள ரஷியா, தான் இத்லிப் மற்றும் ஹாம்ஸ் மாகாணங்களில் மட்டுமே ஐ.எஸ். அமைப்பினரை குறிவைத்து வான்தாக்குதல்கள் நடத்தி வருவதாக தெரிவித்தது.