பெல்ஜியம், இங்கிலாந்து, கெய்தி, இத்தாலி, அமெரிக்கா, வெனிசுலா உள்ளிட்ட நாடுகளில் உள்ள சிறைகளில் கைதிகள் நிரம்பி வழிகின்றனர். அங்கு வழக்கத்தைவிட 2 மடங்கு அதிக கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் நெதர்லாந்தில் உள்ள சிறைகளில் கைதிகளே இல்லை. ஏனெனில் அங்கு குற்றங்கள் நடைபெறாததால் கைதிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
நெதர்லாந்தை பொறுத்த வரை 4-ல் 3 பங்கு சிறைகள் கைதிகள் இல்லாததால் காலியாக வெறிச்சோடி கிடக்கிறது. இது கடந்த 20 ஆண்டுகளில் படிப்படியாக நிகழ்ந்துள்ளது.
சிறைகள் காலியாக கிடப்பதால் அவை முன்னாள் கைதிகளின் மறுவாழ்வு இல்லமாகவும், அகதிகள் இல்லமாகவும் மாறியுள்ளது. ஹர்லெம் சிறை அகதிகள் கால்பந்து விளையாடும் மைதானமாக்கப்பட்டுள்ளது.
பெல்ஜியம், நார்வே ஆகிய நாடுகளில் உள்ள சிறைகளில் கைதிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. எனவே, அவர்கள் காலியாக உள்ள நெதர்லாந்து சிறைகளை வாடகைக்கு எடுத்து அவர்கள் அங்கு அடைக்கப்பட்டுள்ளனர்.
நெதர்லாந்தில் நார்ஜெர் ஹவன் சிறையை நார்வே 3 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ளது. அவற்றுக்கு ஆண்டுக்கு ரூ.250 கோடி வாடகை வழங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அங்கு 242 கைதிகள் அனுப்பப்பட்டுள்ளனர். முன்னதாக பெல்ஜியம் 500 கைதிகளை நெதர்லாந்து சிறைக்கு அனுப்பிவைத் துள்ளது.
கைதிகள் தொடர்ந்து குறைந்து வருவதால் நெதர்லாந்து சிறைகள் மூடப்பட்டு வருகின்றன. எனவே இன்னும் 4 ஆண்டுகளில் 2600 சிறை காவலர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.