செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை கூட்ட அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா வலியுறுத்தல்ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை கூட்ட அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா வலியுறுத்தல்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை கூட்ட அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா வலியுறுத்தல்ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை கூட்ட அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா வலியுறுத்தல்

1 minutes read

வடகொரியாவின் அதிநவீன ஏவுகணை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் உடனடியாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை கூட்டி விவாதிக்கவேண்டும் என்று வலியுறுத்தின.

வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் தனது பக்கத்து நாடான தென்கொரியாவை மிரட்டும் வகையில் எல்லையில் படைகளை குவித்து உள்ளார். இதனால் தென்கொரியாவுக்கு ஆதரவு கரம் நீட்டிய அமெரிக்காவுக்கும் அவ்வப்போது எச்சரிக்கை விடுக்கும் விதமாக அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு, அதிநவீன ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

நேற்று முன்தினம், கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் ‘புக்குக்சோங்-2’ என்னும் அதிநவீன ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியது. தரையில் இருந்து செங்குத்தாக பாய்ந்து சென்று பின்னர் தரையில் இருக்கும் இலக்கை இந்த ஏவுகணை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாக தென்கொரிய ஊடகங்கள் தெரிவித்தன.

இந்த சோதனை ஜப்பானிய கடல் பகுதியில் நடத்தப்பட்டு இருப்பதால் அந்த நாட்டுக்கு வடகொரியா விடுத்த பகிரங்க மிரட்டலாகவே இது கருதப்படுகிறது.

தனது ஏவுகணை சோதனையை வடகொரியாவும் நேற்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தது. இதனால் நிலம், வான்வழி, நீர் மற்றும் நீருக்கடியில் உள்ள இலக்கை எங்கிருந்தாலும் வடகொரியாவால் தாக்கி அழிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற பிறகு, முதன் முதலாக கண்டம் விட்டு கண்டம் பாயும் சோதனையை வடகொரியா நடத்தி இருப்பதால் டிரம்ப் கடும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார். வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடும் கண்டனமும் தெரிவித்தன.

இதைத்தொடர்ந்து வடகொரியாவை கண்டிக்க உடனடியாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை கூட்டி ஆலோசனை நடத்தவேண்டும் என்று வலியுறுத்தின. இந்த கூட்டத்தில் வடகொரியாவுக்கு மேலும் பல்வேறு தடைகளை விதிக்கவேண்டும் என்று இந்த 3 நாடுகளும் வற்புறுத்தும் என்று தெரிகிறது.

வடகொரியா எவ்வித ஏவுகணை சோதனையையும் நடத்தக் கூடாது என்று ஏற்கனவே எச்சரித்துள்ள ஐ.நா. சபை அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து இருக்கிறது. அண்மையில், சீனாவுக்கு நிலக்கரி ஏற்றுமதி செய்வதற்கான உச்சவரம்பையும் ஐ.நா. நிர்ணயித்தது.

கடந்த ஓராண்டில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனையை வடகொரியா தொடர்ச்சியாக நடத்தி இருப்பதால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இறுதியாக கடும் எச்சரிக்கை விடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.