செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் தொடர் கனமழை, மிகப்பெரிய அணை உடையும் அபாயம் | அமெரிக்கா தொடர் கனமழை, மிகப்பெரிய அணை உடையும் அபாயம் | அமெரிக்கா

தொடர் கனமழை, மிகப்பெரிய அணை உடையும் அபாயம் | அமெரிக்கா தொடர் கனமழை, மிகப்பெரிய அணை உடையும் அபாயம் | அமெரிக்கா

1 minutes read

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரோவில்லே என்ற இடத்தில் மிகப்பெரிய அணை ஒன்று உள்ளது. 235 மீட்டர் உயரம் கொண்ட இந்த அணைதான் அந்நாட்டின் மிக உயரமான அணையாகும்.

கலிபோர்னியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், இந்த அணை அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. தற்போது அவசர கால மதகு வழியாக அணையின் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தொடர்ந்து அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால், எந்த நேரத்திலும் மதகு உடையலாம் என கலிபோர்னியா நீர் வளத்துறை எச்சரித்து உள்ளது. எனவே ஒரோவில்லே நகரில் தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

ஒரோவில்லே நகரில் சுமார் 16 ஆயிரம் பேர் வசித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இவர்களில் பெரும்பாலானோர் இந்திய வம்சவாளியினர் என மற்றொரு தகவல் கூறுகிறது.

தற்போது அங்கிருந்து வெளியேற தொடங்கியுள்ள மக்கள் குடும்பம் குடும்பமாக வாகனங்களில் அணிவகுத்து செல்வதால் அங்கு உள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருக்கிறது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.