செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பறவைகளை பார்த்து வருபவர்களுக்கு மன அழுத்தம் குறைவு -எக்ஸீடர் பல்கலைக்கழகம்பறவைகளை பார்த்து வருபவர்களுக்கு மன அழுத்தம் குறைவு -எக்ஸீடர் பல்கலைக்கழகம்

பறவைகளை பார்த்து வருபவர்களுக்கு மன அழுத்தம் குறைவு -எக்ஸீடர் பல்கலைக்கழகம்பறவைகளை பார்த்து வருபவர்களுக்கு மன அழுத்தம் குறைவு -எக்ஸீடர் பல்கலைக்கழகம்

0 minutes read

அதிகரித்து வரும் செல்போன் டவர்கள், மரங்களை அழிப்பது ஆகிய காரணங்களால் பறவைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நிலையில், பறவைகளைத் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு மன அழுத்தம் குறைந்து உற்சாகம் பிறக்கும் என இங்கிலாந்தை சேர்ந்த எக்ஸீடர் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், பறவைகளைத் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு ஆகியவை குறைவாக இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுதவிர வசிக்கும் வீட்டைச் சுற்றி புதர்கள், மரங்கள் ஆகியவை இருப்பதும் மனிதர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கிறதாம்.

இதுகுறித்து எக்ஸீடர் பல்கலைக்கழக பேராசிரியர் டேனியல் காக்ஸ் “நகரத்தில் வசிப்பவர்களை விட இயற்கையோடு இணைந்து வாழ்பவர்களே அதிக மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள்” என கருத்துத் தெரிவித்துள்ளார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.