கேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை மீட்பதற்காக போராட்டத்தில் குதித்துள்ளனர்.
தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்க வேண்டுமென கோரி கடந்த 28 நாட்களாக வீதியில் இராணுவ முகாம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பிலவுக் குடியிருப்பு மக்களின் போராட்டக்களத்துக்கு 28ஆவது நாளான திங்கட்கிழமை தென்னிந்திய திரைப்பட நடிகர் தலைவாசல் விஜய் மற்றும் இயக்குனரும் ஈழ உணர்வாளருமான புகழேந்தி தங்கராஜ் ஆகியோர் குறித்த மக்களை சந்தித்துள்ளனர்.