செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

1 minutes read

ராமேசுவரம் மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடந்தது.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் அன்பு தென்னரசன், ராவணன், சிவக்குமார், செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் இலங்கையை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. மத்தியில் உள்ள பா.ஜனதா அரசு தமிழக மீனவர் விவகாரத்தில் மவுனம் காப்பதாகவும், உடனடியாக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற பதாகைகளையும் நாம் தமிழர் கட்சியினர் கையில் ஏந்தி இருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட சீமான் உள்ளிட்ட 300 பேர் கைது செய்யப்பட்டனர். இப்போராட்டம் குறித்து சீமான் அளித்த பேட்டி வருமாறு:-

தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டது எதிர் பாராமல் நடந்த நிகழ்வு அல்ல.

தமிழக மீனவர்கள் இது வரை 840 பேர் சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பதாக எம்.பி.க்கள் பாராளுமன்றத்திலேயே பதிவு செய்துள்ளனர். சிறிய நாடான இலங்கை எந்தவித பயமுமின்றி தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வது தொடர்கிறது.

எல்லைத்தாண்டிய பயங்கரவாதம் என்பது இலங்கை கடற்படையினருக்கும் பொருந்தும். கச்சத்தீவு வரை எல்லைத்தாண்டி வந்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொல்கிறார்கள்.

தற்போது மீனவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்ளும் மத்திய அரசு மீனவர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

தமிழக மீனவர்களின் 138 படகுகள் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதனை மீட்டு கொடுக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இது கண்டனத்திற்குரியது.

மீனவர் பிரச்சினைக்கு உரிய தீர்வு காண கச்சத்தீவை உடனடியாக மீட்க வேண்டும். அப்போதுதான் தமிழக மீனவர்கள் நலன் பாதுகாக்கப்படும்.

இவ்வாறு சீமான் கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.