கடந்த வெள்ளிக்கிழமை மசார்–இ–சாரிப் நகரில் உள்ள ராணுவ முகாமை குறி வைத்து அதிபயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் 140–க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். பாதுகாப்பு படைப் பிரிவினர் போதிய கண்காணிப்பு பணியில் ஈடுபடாததால்தான் ராணுவத்துக்கு இத்தனை பெரிய சேதம் ஏற்பட்டது உளவுத்துறையின் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து இந்த தோல்விக்கு பொறுப்பேற்று ராணுவ மந்திரி அப்துல்லா ஹபீபி, ராணுவ தளபதி குதாம் ஷா ஷாகிம் ஆகியோர் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்தனர். அவர்களுடைய ராஜினாமா கடிதங்களை அதிபர் அஷரப் கானி உடனடியாக ஏற்றுக் கொண்டார். இந்த தகவலை அதிபர் மாளிகை வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.
அண்மையில் ஆப்கானிஸ்தானில் 10 டன் எடையுள்ள குண்டை வீசி 100–க்கும் மேலான பயங்கரவாதிகளை அமெரிக்கா கொன்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே தலீபான் பயங்கரவாதிகள் 140–க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை கொன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.