‘வட கொரியா செல்வேன்’ : தென் கொரிய அதிபராக பொறுப்பேற்ற பின், மூன் ஜேயின், பொதுமக்கள் முன்னிலையில் பேசியதாவது:அமெரிக்கா சென்று, அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப்பை சந்திக்க ஆர்வமுடன் உள்ளேன். அதே போல், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் செல்ல திட்டமிட்டு உள்ளேன். சரியான நேரம் வரும் போது, வட கொரியாவிற்கும் செல்வேன்.
இவ்வாறு அவர் பேசினார்.தென் கொரியாவுடன் வட கொரியா, தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வரும் நிலையில், மூன் ஜேயின், வட கொரியா செல்ல விருப்பம் தெரிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்துள்ளது.
3
தென் கொரியாவில் நடந்த அதிபர் தேர்தலில், மூன் ஜேயின், 64, வெற்றி பெற்றதை அடுத்து, நேற்று அவர், அதிபராக பொறுப்பேற்றார். கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவில், முன்னாள் பெண் அதிபர், பார்க் குன் ஹை, ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், நேற்று முன்தினம் நடந்தது. இதில், கொரிய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த, மூன் ஜேயின், 41 சதவீத ஓட்டுகளையும், அவரை எதிர்த்து போட்டி யிட்ட, கொரிய விடுதலை கட்சியைச் சேர்ந்த, ஹாங்ஜியூன் பியோ, 24 சதவீத ஓட்டுகளையும் பெற்றனர். இதையடுத்து, மூத்த வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான மூன் ஜேயின், தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தென் கொரிய அதிபராக, நேற்று அவர் பதவியேற்றார்.பதவியேற்பு நிகழ்ச்சி மிக எளிமையாக நடந்தது. தென் கொரியாவின், அனைத்து மக்களின் நலனுக்காக பாடுபடப்போவதாக, மூன் உறுதிஅளித்துள்ளார். புதிய அதிபராக பொறுப்பேற்று உள்ள மூனுக்கு, ஜப்பான், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் வாழ்த்து தெரிவித்துள்ளன.