செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இன்சுலின் ஊசி மருந்தில் இருந்து தப்பிக்க புதிய மருந்து

இன்சுலின் ஊசி மருந்தில் இருந்து தப்பிக்க புதிய மருந்து

1 minutes read

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த சிலர் வாரம் ஒருமுறை அல்லது தினமும் இன்சுலின் மருந்து ஊசி போட்டுக் கொள்கின்றனர். இதனால் உடல் நலக்கோளாறினால் அவதிப்படுகின்றனர்.

எனவே தினமும் ஊசி மருந்தில் இருந்து தப்பிக்க புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை அமெரிக்காவில் உள்ள டியூக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த விஞ்ஞானிகள் குழுவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அசுதோஸ் சில்கோட்டியும் ஒருவர்.

புதிய மருந்து மூலம் மாதம் ஒரு தடவை மட்டும் ஊசி போட்டால் போதும். இதை 2-ம் நிலை (டைப் 2) நீரிழிவு நோயாளிகளுக்கு பயன்படுத்த முடியும். தற்போது 2-ம் நிலை நீரிழிவு நோயாளிகளுக்கு குளுககான்-லைக் பெப் டிட்-1 என்ற மருந்து பயன்படுத்தப்படுகிறது.

இது இணையத்தில் இருந்து இன்சுலீனை வெளியேற்றி ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. தற்போது புதிதாக கண்டு பிடித்துள்ள மருந்து ‘ஜெல்’ போன்ற தோற்றம் உடையது.

இதை ஊசி மூலம் செலுத்தியவுடன் உடலில் தேங்கிவிடும். பின்னர் உடல் வெப்பத்தின் மூலம் சிறிது சிறிதாக உருகி ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

இந்த மருந்து விலங்குகளிடம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. தற்போது பயன்படுத்தப்படும் மருந்தைவிட 3 மடங்கு குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்தியது. எனவே 2-ம் நிலை நீரிழிவு நோயாளிகளுக்கு இம்மருந்தை பயன்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.