செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் மூன்றில் ஒரு பங்கு ரோகிங்யா மக்கள் அகதிகளாக ஓட்டம் | மியான்மர் | ஐ.நா. பொதுச்செயலாளர் தகவல்

மூன்றில் ஒரு பங்கு ரோகிங்யா மக்கள் அகதிகளாக ஓட்டம் | மியான்மர் | ஐ.நா. பொதுச்செயலாளர் தகவல்

1 minutes read

மியான்மர் நாட்டில் ரோகிங்யா என்ற சமூகத்தினர் வசித்து வருகிறார்கள். முஸ்லிம் மதத்தை சேர்ந்த இவர்கள் அந்த நாட்டில் சிறுபான்மையினர் மக்களாக உள்ளனர். இவர்களுக்கும், அந்த நாட்டில் பெரும்பான்மையின மக்களாக உள்ள புத்த மதத்தினருக்கும் இடையே அடிக்கடி மோதல் நடந்து வந்தது.

2 ஆண்டுகளுக்கு முன்பு இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட கலவரத்தில் பல லட்சம் ரோகிங்யா மக்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள். தற்போது மீண்டும் அங்கு கலவரம் வெடித்துள்ளது. ராணுவத்தினரே ரோகிங்கியா மக்களை தாக்கி கொன்று வருகிறார்கள்.

இதனால் ரோகிங்யா மக்கள் மீண்டும் அகதியாக வங்காளதேசத்திற்கு தப்பி ஓடுகின்றனர். இப்போது ஏற்பட்டுள்ள கலவரத்தில் மட்டும் 3 லட்சத்து 79 ஆயிரம் பேர் அகதிகளாக வங்காளதேசத்திற்கு சென்றுள்ளனர்.

இது சம்மந்தமாக ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் கூறியதாவது:-

மியான்மர் நாட்டில் மனிதாபிமானத்திற்கு பேரழிவு ஏற்பட்டுள்ளது. அங்கு ரோகிங்யா மக்களில் 3-ல் ஒரு பங்கினர் அகதிகளாக வெளியேறி விட்டார்கள். மனிதாபிமானமற்ற செயலுக்கு சிறந்த உதாரணமாக அந்த நாடு மாறி இருக்கிறது.

கிராம மக்கள் மீதும், ராணுவத்தினர் தாக்குதல் நடத்துகிறார்கள். இதை ஒருபோதும் ஏற்க முடியாது. அங்கு சுமூக நிலை திரும்புவதற்கு அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.