செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி | ஏவுகணை தயாரிப்பை நிறுத்த மாட்டோம்

ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி | ஏவுகணை தயாரிப்பை நிறுத்த மாட்டோம்

1 minutes read

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பரிசோதித்தாக ஈரான் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதை மையமாக வைத்து ஐக்கிய நாடுகள் சபை ஈரானுடன் செய்துகொண்ட அணு ஆயுதங்கள் பரவல்தடை தொடர்பான உடன்படிக்கையை ரத்து செய்யப் போவதாகவும் அமெரிக்கா தொடர்ந்து மிரட்டி வருகிறது.

இதற்கிடையில், அதிநவீன ஏவுகணைகள் தயாரிக்க கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய ஈரான் நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதற்கு நன்றி தெரிவித்து இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி, நாங்கள் ஏவுகணைகளை தயாரித்து வைத்திருக்கிறோம். தயாரித்து வருகிறோம். தொடர்ந்து தயாரிப்போம். எங்களை பாதுக்காத்துகொள்ள தேவையான எவ்வித ஆயுதங்களையும், நாங்கள் தயாரித்து இருப்பில் வைப்போம். தேவைப்படும் நேரத்தில் அவற்றை பயன்படுத்துவோம்.ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட சமரசங்களையும், ஒப்பந்தங்களையும் நீங்கள் (அமெரிக்கா) மதிக்க தவறுவதுடன் பிறநாடுகளையும் உங்களுக்கு ஆதரவாக திரட்டுகிறீர்கள். இதைப்போன்ற போக்கை தொடர்ந்து கடைப்பிடித்தால் எதிர்காலத்தில் மற்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதையும், ஒப்பந்தங்களை ஏற்படுத்துவடையும் அமெரிக்கா மறந்துவிட வேண்டியதாகி விடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.