செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அணு ஆயுத சோதனையால் 200 போ் பலி? | வடகொரியா

அணு ஆயுத சோதனையால் 200 போ் பலி? | வடகொரியா

1 minutes read

வடகொரியாவில் அணு ஆயுத சோதனை நடந்த இடத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நிகழ்ந்த சுரங்க விபத்தில் 200 போ் பலியானதாக ஜப்பான் நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமீப காலமாக வடகொரியா ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி வடகொரியா இந்த சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.

அந்த வரிசையில் கடந்த செப்டம்பர் மாதம் 3-ம் தேதி மாபெரும் நிலத்தடி அணுகுண்டு வெடிப்பு சோதனை ஒன்றை அந்நாடு நடத்தியது. இது அந்த நாடு நிகழ்த்திய ஆறாவது சோதனையாகும்.

இந்த சோதனை நடந்து முடிந்த சில நாட்களில் சோதனை நடைபெற்ற புங்கிய ரி என்னும் இடத்தில் உள்ள சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 100 தொழிலாளா்கள் பலியானகினர். தொடா்ந்து நடைபெற்ற மீட்பு பணிகளின் போது மீண்டும் ஒருமுறை சுரங்கத்தில் மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. அப்போது மேலும் 100 போ் என மொத்தம் 200 போ் பலியானதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அணு ஆயுத சோதனை காரணமாகவே இந்த விபத்துகள் நடந்ததாக கூறப்படுகிறது எனவும் ஜப்பான் நாட்டு தொலைக்காட்சி நிறுவனம் அசாஹி செய்தி வெளியிட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.