செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கடத்தலில் இருந்து சிறுமியை காப்பாற்றிய இந்தியருக்கு சாதனையாளர் விருது | பிரிட்டன்

கடத்தலில் இருந்து சிறுமியை காப்பாற்றிய இந்தியருக்கு சாதனையாளர் விருது | பிரிட்டன்

1 minutes read

பிரிட்டனில் இந்தியாவைச் சேர்ந்த சட்பீர் அரோரா என்பவர் தனது மனைவியுடன் இணைந்து டேக்சி ஓட்டி வருகிறார். அவர் கடந்த பிப்ரவரி மாதம் 20-ம் தேதி 13 வயது பள்ளிச்சிறுமியை அவரது வீட்டிலிருந்து களவுசெஸ்டர் ரெயில் நிலையத்தில் இறக்கி விட்டுள்ளார். அங்கு யாரும் இல்லாததால் அரோராவிற்கு சந்தேகம் வந்துள்ளது.சிறுமி வீட்டிற்கு தெரியாமல் இங்கு வந்துள்ளார் என எண்ணி சிறுமியிடம் விசாரித்தார். சிறுமி சரிவர பதில் கூறாததால் சிறுமி போனில் பேசியதை பதிவு செய்தார். பின்னர் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியை சாம் ஹெவிங்ஸ் என்பவர் கடத்துவதற்கு திட்டம் தீட்டிய உண்மை தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சிறுமியை மீட்டு பெற்றொரிடம் ஒப்படைத்தனர்.இந்நிலையில், அரோராவின் செயலை பாராட்டி அவருக்கு சிறந்த பாதுகாவலர் என்ற சான்றிதழை வழங்க உள்ளதாக அப்பகுதி கவுன்சிலர் அறிவித்துள்ளார். மேலும் அவர், அரோரா மிகவும் சிறந்த பணியை செய்துள்ளார். சிறிதும் யோசிக்காமல் செய்த காரியத்தால் சிறுமி காப்பாற்றப்பட்டாள் என பாராட்டினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.