செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் விளாடிமிர் புதின் ரஷிய அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டி

விளாடிமிர் புதின் ரஷிய அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டி

0 minutes read
ரஷியா நாட்டின் பிரதமராக முன்னர் பொறுப்பு வகித்த விளாடிமிர் புதின்(65) கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது ஆறாண்டு பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக இன்று அறிவித்துள்ளார்.
வோல்கா நகரத்தில் உள்ள பிரபல கார் தொழிற்சாலை ஊழியர்கள் மத்தியில் இன்று காலை உரையாற்றியபோது தனது விருப்பத்தை அவர் வெளியிட்டார்.
எதிர்வரும் தேர்தலில் அவர் வெற்றிபெற்று அதிபரானால் வரும் 2024-ம் ஆண்டுவரை நீடிக்கும் புதினின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் ரஷியாவில் பல்வேறு திருப்பங்கள் நிகழலாம் என தெரிகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.