செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 35 ஆண்டுகளுக்குப்பின் சவுதி அரேபியாவில் சினிமாவுக்கு அனுமதி

35 ஆண்டுகளுக்குப்பின் சவுதி அரேபியாவில் சினிமாவுக்கு அனுமதி

1 minutes read

முக்கியமான அரபு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கின்றன. இதில் பொதுவெளியில் சினிமாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை முக்கியமானது. மத கட்டுப்பாடுகள் மீறப்படுவதாக கூறி கடந்த 1980-களின் தொடக்கத்தில் சினிமாவுக்கு சவுதி அரசு தடை விதித்தது.

ஆனால் தற்போது சவுதியின் பட்டத்து இளவரசராக இருக்கும் முகமது பின் சல்மான், நாட்டில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக குடிமக்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த பல்வேறு தடைகளை அவர் விலக்கி வருகிறார். இதில் முக்கியமாக, பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை அடுத்த ஆண்டு முதல் விலக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து சுமார் 35 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக அடுத்த ஆண்டு முதல் நாட்டில் சினிமாவுக்கும் அனுமதி வழங்க சவுதி அரசு முடிவு செய்துள்ளது. கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் கடுமையான பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ள இந்த நிலையில், சினிமா மீதான தடை விலக்கப்படுவதால் பொழுதுபோக்குத்துறை வளர்ச்சி காணும் என சவுதி அரசு தெரிவித்து உள்ளது.

மேலும் 2030-ம் ஆண்டுக்குள் 2 ஆயிரத்துக்கும் அதிகமான தியேட்டர்கள் உருவாக்கப்படும் எனவும், இது நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பை ஏற்படுத்துவதுடன், 30 ஆயிரம் நிரந்தர வேலைவாய்ப்பையும் உருவாக்கும் என்றும் சவுதி அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.