Saturday, May 4, 2024

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் வடமாகாண முதலமைச்சர் குழு இரணைத்தீவுக்கு விஜயம் (படங்கள்& வீடியோ இணைப்பு)

வடமாகாண முதலமைச்சர் குழு இரணைத்தீவுக்கு விஜயம் (படங்கள்& வீடியோ இணைப்பு)

2 minutes read

 

 

வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான குழுவினர் இரணைத்தீவு மக்களை  நேற்று (14.05.2018) சந்தித்ததுடன்  அவர்களுக்கு உலர் உணவுகளும் வழங்கிவைத்தனர்.

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவில் உள்ள இரணைத்தீவு மக்கள் தங்களின் சொந்த நிலத்திற்கு செல்ல வேண்டும் என வலியுறுத்தி  கடந்த வருடம் மே மாதம் முதலாம் திகதி  ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் 359 ஆவது நாள் வரை எவ்வித தீர்வும் இன்றி தொடர்ந்த நிலையில் பொறுமையிழந்த மக்கள் தாங்களாகவே தங்களின் சொந்த நிலமான இரணைத்தீவுக்குச் சென்று குடியேறினர்.

இதனை தொடர்ந்து பல அரசியல்வாதிகளும் நிலமீட்ட போராளிகளாக விளங்கிய இரணைத்தீவு மக்களை சென்று பார்வையிட்டு வந்த நிலையில் நேற்று ( 14-05-2018) வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி. விக்கினேஸ்வரன் மற்றும் கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன், முன்னாள் வடக்கு விவசாய அமைச்சர் ஜங்கரநேசன், மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் உள்ளிட்டவர்கள் சென்று மக்களை  சந்தித்துள்ளனர்.

 

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More