Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் விஜய் மற்றும் விக்ரம் வரிசையில் இடம் பிடித்த இந்திய உணவு- ஜேசு ஞானராஜ்

விஜய் மற்றும் விக்ரம் வரிசையில் இடம் பிடித்த இந்திய உணவு- ஜேசு ஞானராஜ்

1 minutes read

விஜய், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்கள் ஒரு பொருளை விளம்பரப்படுத்தும் போது அதன் விற்பனை விகிதம் பல மடங்கு அதிகரிப்பது தெரிந்த விஷயம் தான். அதனால் தான் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின்   தயாரிப்பை மக்களிடம் கொண்டு செல்ல பிரபலமானவர்களை நாடுகின்றன. அந்த வகையில் கோகோகோலா நிறுவனம் இளையதளபதி விஜய், விக்ரம் என்று பல பிரபலங்களைக் கொண்டு தங்களின் குளிர்பானத்தை மக்களிடம் கொண்டுபோய்ச்  சேர்த்திருக்கிறது. இப்போது, ஜெர்மனி வாழ் இந்தியர்களிடம் தங்களின் குளிர்பானத்தை பிரபலப்படுத்த இந்திய உணவை (“தாலி”) வைத்து விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள்.

விஜய் விக்ரம் க்கான பட முடிவு

ஜெர்மனியில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் வாழ்கிறார்கள். 2011 ல் ஜெர்மனி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட, திறமையானவர்களுக்கு கொடுக்கப்படுகின்ற Blue Card வைத்திருப்போர்களில் 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்தியர்களே. இப்படி இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை அறிந்து கோகோ கோலா நிறுவனம் ஜெர்மனியில் புது விதமாக தங்களின் குளிர்பானத்திற்கு விளம்பரம் செய்துள்ளது.

"தாலி" உணவு க்கான பட முடிவு

அந்த புதிய  விளம்பரத்தில் ஒரு இந்தியர் கையில் கோகோ கோலா வைத்திருப்பதுடன், அவர் அருகில் “தாலி” என்ற இந்தி வார்த்தையும் அதற்கேற்றார் போன்ற இந்திய உணவும் இடம் பெற்றுள்ளது. இந்த விளம்பரம் மூலம் அவர்கள் இந்திய மக்களை கவன ஈர்ப்பு செய்யும் அதேவேளையில் ஜெர்மனியில் இருக்கும் இந்திய ரெஸ்டாரெண்ட்களில் “தாலி” உணவை சாப்பிட வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது இவர்களுக்கு கிடைத்திருக்கும் பம்பர் பரிசு!

 

 

 

-ஜேசு ஞானராஜ்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More