கடந்த  சனிக்கிழமை (31)  அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் குறித்த சம்பவம்  இடம்பெற்றுள்ளதுடன் சந்தேக நபர் இரு நாட்கள் அட்டாளைச்சேனை பகுதியில் தலைமறைவாகி இருந்த வேளை   கல்முனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து கைதானார்.

அதன் பின்னர் குறித்த சம்பவம் தொடர்பான   வழக்கு இன்று புதன்கிழமை(18)  கல்முனை  நீதிமன்ற  நீதிபதி  ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு  எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது குறித்த வழக்கு தொடர்பில் நீதிவான் குறிப்பிட்டதாவது

 யாழ்ப்பாணம் திருகோணமலை மல்லிகை தீவு பகுதிகளில் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளதுடன் அதற்கெதிராக  பல அமைப்பினர் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.ஆனால் இச்சம்பவம் தொடர்பில்  இங்கு எந்த அமைப்பினரோ அதற்கான கேள்விகளையோ எந்த தரப்பினரும் முன்வைக்காதது வியப்பினை தருகிறது.

வேறு இடத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருந்தால்  நியாயமான போராட்டங்கள் நடந்திருக்ககூடும் என சந்தேக நபர் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகளிடம் தெளிவுபடுத்தினார். குறித்த சந்தேக நபரது வயது  பாதிக்கப்பட்ட பிள்ளையின் வயது  தொடர்பில் வினா எழுப்பி தனது விளக்கத்தை வழங்கி எதிர்வரும் ஒக்டோபர் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

மேலும்  சம்பவ தினமன்று கல்முனைகுடி சாஹிப் வீதி  பகுதியை சேர்ந்த  பாத்திமா இன்சாத் (8 வயது) என்ற மாணவி வீடு திரும்பிய வேளை சந்தேக நபரான கல்முனைகுடி கனீபா வீதி பகுதியை சேர்ந்த சந்தேக நபரான ஏ.கரீம் (55 வயது) அழைத்து தனக்கு ஒரு சவர்க்காரம் ஒன்றினை வாங்கி தருமாறு கோரியதுடன் இதனை அடுத்து குறித்த மாணவியும் சவர்க்காரம் ஒன்றினை வாங்கி சந்தேக நபரது வீட்டிற்கு சென்று வழங்கியுள்ளார்.

இந்நிலையில்  சந்தேக நபர் அம்மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த வேளை அயலவர்கள் அதை கண்ணுற்று அவ்வீட்டிற்கு சென்றுள்ளனர்.இதன் போது அம்மாணவியை கைவிட்டு சந்தேக நபர்  தப்பி  சென்றிருந்தார்.

மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான செய்தி அப்பகுதிக்கு  பரவ ஆரம்பித்த போது அதை அறிந்த சந்தேக நபர் தலைமறைவானார். இதனை அடுத்து தேடிய பொலிஸார் இரண்டு நாட்களின் பின்னர் சந்தேக நபரை அயலவர்களின் ஒத்துழைப்புடன் கைது செய்திருந்தனர்.

இதன் போது பாதிக்கப்பட்ட மாணவி அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவியைபாலியல் துன்புறுத்தல் செய்தவரின் மகள் அங்குள்ள பாடசாலை ஒன்றின் ஆரம்ப கல்வி ஆசிரியையாக கடமையாற்றி வருகின்றார் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.