துஷ்யந்தன் என்ற இளைஞர் பல்கலைக்கழத்தில் கல்வி பயின்று வருகின்றார். குறித்த  மாணவனின் தந்தை கணபதி பிள்ளை பத்மநாதன் பத்தாண்டுகளுக்கு முன்னர் உழவு இயந்திரத்தில் இருந்து வீழ்ந்தமையால் கை கடுமையா பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தந்தையின் கையை வைத்தியர்கள் சத்திரசிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.

இந்நிலையில் தனது தந்தைக்கு செயற்கை கையை பொறுத்த பல வைத்தியசாலைக்கு சென்று கேட்டபோது சத்திர சிகிச்சைக்கு அதிக பணம் தேவைப்பட்டது. செயற்கை கையைபொறுத்துவது என்பது முடியாத காரியமாகவே பத்மநாதனின் குடும்பத்திற்கு இருந்தது.

இந்நிலையில் பத்மநாதனின் மகன் துஷ்யந்தன் அன்றிலிருந்து தந்தைக்காக செயற்கைக் கையை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில, நீண்ட கால முயற்சியின் பின்னர் செயற்கை கையொன்றை தயாரித்து தனது தந்தைக்கு பொறுத்தியுள்ளார்.